மொழிக்காலனித்துவமும் பரதநாட்டியமும் |
'ஆடலின் ஆற்றுகைப் பரிமாணங்கள் உன்னத வளர்ச்சியடைந்த அளவுக்கு அதன் ஆய்வுப் பரப்புகளின் வளர்ச்சி எழுச்சி கொள்ளவில்லை' என்பார் பேராசிரியர். சபா. ஜெயராசா. இதனால், தானே இதற்கான ஆய்வு அறிவு நிலைப்பட்ட காரணங்களை வரலாற்று ரீதியிலும், புலமைத்துவ ரீதியிலும் முன்வைக்கும் நுண்ணாய்வுக் கூறுகளை சிந்தனை மரபுகளை ஆடலியல் முறைகளை நமக்கு அடையாளம் காட்டுகின்றார். |